தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை - இந்தியாவின் கடல்சார் பயிற்சி தலைநகரம்

சென்னை - இந்தியாவின் கடல்சார் பயிற்சி தலைநகரம்

சென்னை - இந்தியாவின் கடல்சார் பயிற்சி தலைநகரம்


UPDATED : ஏப் 06, 2011 12:00 AM

ADDED : ஏப் 06, 2011 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2011 12:00 AM ADDED : ஏப் 06, 2011 12:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் முக்கிய கடல்சார் பல்கலைக்கழகத்தைக் கொண்டிருக்கும் சென்னையை சுற்றிலும் 70 சதவிகித கடல்சார் பயிற்சி மையங்கள் இருப்பதால், இந்தியாவின் கடல்சார் பயிற்சி தலைநகரமாக சென்னை விளங்குகிறது.


தேசிய கடல்சார் வார கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கடல்சார் வணிகத் துறையின்(எம்.எம்.டி) முதன்மை அதிகாரி பி. மிஸ்ரா, "நாட்டில் மொத்தம் 128 கடல்சார் பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றில் 20 மையங்கள் பிரதானமானவை.


கடல்சார் துறையானது, நாட்டின் கருவூலமாக செயல்பட்டு ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. மேலும் சரக்கு கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சிக்கும் பெரும் துணை புரிகிறது.


மும்பை தாக்குதலுக்கு பிறகு, நாட்டின் கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7500 கி.மீ. நீளத்தைக் கொண்ட இந்திய கடல் பரப்பில் 13 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய துறைமுகங்களும் உள்ளன" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us