தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டோபல் தேர்வுக்கு புதிய சேவை மையம்

டோபல் தேர்வுக்கு புதிய சேவை மையம்

டோபல் தேர்வுக்கு புதிய சேவை மையம்


UPDATED : ஏப் 07, 2011 12:00 AM

ADDED : ஏப் 07, 2011 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 07, 2011 12:00 AM ADDED : ஏப் 07, 2011 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு


உலகளவில் டோபல் தேர்வு எழுதுபவர்களை அதிகளவில் கொண்டிருக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் அதேசமயம், அதற்கான வழிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த சூழலில்தான் இ.டி.எஸ்(Educational Testing Service) புதிய ஆலோசனை மையத்தை துவக்கியுள்ளது. இந்த மையத்தை இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் 000௦௦௦௦௦௦-800-100-3780 என்ற எண்ணில் இலவசமாக தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்வு எழுதுபவர்கள் தங்களின் சந்தேகங்களை TOEFLsupport4India@ets.org. என்ற ஈமெயில் முகவரியிலும் அனுப்பலாம்.


டோபல் தேர்வை எழுதுபவர்கள், தேர்வுக்கு தயாராகும் உபகரணங்களை அடையாளப்படுத்தவும், தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கவும், மதிப்பெண் அறிக்கைகளைப் பெறவும், கூடுதல் மதிப்பெண் அறிக்கைகளை கேட்கவும் மற்றும் பிற நிர்வாக சந்தேகங்களை வினவவும் இந்த மையம் துணை புரியும். இந்த மையத்தின் மூலம் டோபல் தேர்வை எழுதும் இந்தியர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெறலாம்.


டோபல் தேர்வானது, உலகம் முழுவதும் 165 நாடுகளில் உள்ள 7500 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில், 165 நாடுகளில் 4500 தேர்வு மையங்களைக் கொண்டுள்ளது. இதுவரை உலகளவில் மொத்தம் 2.5 கோடி மாணவர்கள் டோபல் தேர்வை எழுதியுள்ளனர்.


டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுகளைப் பற்றி மிகவும் விரிவான முறையில் ஏற்கனவே நமது "கல்விமலர் இணையதளத்தில்" கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதை தற்போது மீண்டும் காண விரும்பும் வாசகர்கள் கல்விமலர் இணையதளத்தின் கட்டுரைகள் பகுதிக்கு சென்று அவற்றை காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us