UPDATED : ஏப் 08, 2011 12:00 AM
ADDED : ஏப் 08, 2011 03:57 PM
அ நிறம் | அளவு
டெல்லியில் தேசிய தொலைத்தொடர்பு நிதி மையத்திற்கான அடிக்கல்லை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நாட்டினார்.
இந்த தேசிய தொலைத் தொடர்பு நிதி மையம் செயல்படவிருக்கும் தகவல்களையும் அமைச்சர் கபில் சிபல் அப்போது விளக்கிப் பேசினார்.
பொது மற்றும் தனியார் நிறுவனங்களும், சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களும் இணைந்து எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் ஈடுபடும்.
நிதியம் தொடர்பான பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கொடுப்பதே தேசிய தொலைத்தொடர்பு நிதி மையத்தின் நோக்கம் என்று கபில் சிபல் கூறினார்.
