தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பங்கள் விற்பனை


UPDATED : ஏப் 09, 2011 12:00 AM

ADDED : ஏப் 09, 2011 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2011 12:00 AM ADDED : ஏப் 09, 2011 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 2011 - 2012ம் ஆண்டிற்கான இன்ஜினியரிங் (அனைத்து பாடப்பிரிவுகள்), பி.பார்ம்., பி.பார்ம் (லேட்ரல் என்டரி), 6 வருடம், 3 வருடம் படிப்பு, எம்.எஸ்., முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை, எம்.பி.பி.எஸ்., - பி.பி.டி., - பி.எஸ்சி., நர்சிங், எம்.பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், பி.டி.எஸ்., மற்றும் பல் மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.


பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி துவக்கி வைத்து கூறுகையில், "விண்ணப்பங்கள் வரும் ஜூன் 10ம் தேதி வரை வழங்கப்படும். அன்றே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். எம்.பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்" என்றார்.


நிகழ்ச்சியில், தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், சிண்டிகேட் உறுப்பினர் முத்துக்குமார், அனைத்து துறை முதல்வர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us