தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச கோடை பயிற்சி முகாம் : ஈரோட்டில் ஏப்., 27ல் துவக்கம்

இலவச கோடை பயிற்சி முகாம் : ஈரோட்டில் ஏப்., 27ல் துவக்கம்

இலவச கோடை பயிற்சி முகாம் : ஈரோட்டில் ஏப்., 27ல் துவக்கம்


UPDATED : ஏப் 09, 2011 12:00 AM

ADDED : ஏப் 09, 2011 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2011 12:00 AM ADDED : ஏப் 09, 2011 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 27ம் தேதி துவங்குகிறது.


ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் கருணாநிதி கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடந்து வருகிறது.


நடப்பாண்டு பயிற்சி முகாம் வரும் 27ம் தேதி துவங்கி, மே 15 வரை, 21 நாட்கள் நடக்கிறது. சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு, சிலம்பாட்டம், வாலிபால், தடகளம், ஹாக்கி, குண்டெறிதல், நீளம் தாண்டுதல், கால்பந்து உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த பால், முட்டை ஆகியவை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us