தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் கல்வியை வளர்க்க கலாம் யோசனை

அறிவியல் கல்வியை வளர்க்க கலாம் யோசனை

அறிவியல் கல்வியை வளர்க்க கலாம் யோசனை


UPDATED : ஏப் 12, 2011 12:00 AM

ADDED : ஏப் 12, 2011 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2011 12:00 AM ADDED : ஏப் 12, 2011 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அடிப்படை அறிவியல் சார்ந்த நிபுணர்கள் குழுவை அமைத்து, அவர்கள் மூலம், மாணவர்கள் அறிவியல் பாடங்களை படிக்க தூண்ட வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியுள்ளார்.


மாணவர்கள் அறிவியல் பாடங்களை படிப்பதற்கு தூண்டும் வகையில், அடிப்படை அறிவியல் சார்ந்த நிபுணர்கள் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்கனவே தெரிவித்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், அந்த நிபுணர்களுக்கு நாட்டின் முதன்மையான அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களில் வேலை தரப்பட வேண்டும். அதனால் அடிப்படை அறிவியல்கள் வளர்ச்சி அடையும். மொத்தம் 300௦௦ முதல் 400௦௦ பேர் அடங்கிய அந்த நிபுணர்கள் குழுவிற்கு உறுதியான வேலை வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்றும் அப்துல்கலாம் கூறியுள்ளார்.


சென்னையில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய அப்துல்கலாம், "அறிவுத்திறன் மற்றும் தனித்தன்மை மேம்பட வேண்டும். அறிவுத்திறன் என்பது ஒரு விபத்து போன்று உடனே ஏற்பட்டு விடாது. திட்டமிடுதலுடன் கூடிய முயற்சிகளின் மூலமே சாத்தியப்படும். செயல் சார்ந்த அறிவை பெறுவதன் மூலமே, தனித்தன்மையை பெற முடியும்.


பெண்கள் முன்னேறினால் இந்த நாடு முன்னேறும். விஞ்ஞானிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 5 கல்வியறிவற்ற நபர்களுக்கு கற்பிப்பதோடு, குறைந்தபட்சம் 5 மரங்களை நட வேண்டும்" என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us