UPDATED : ஏப் 13, 2011 12:00 AM
ADDED : ஏப் 13, 2011 11:28 AM
டெல்லியிலுள்ள தெற்காசிய பல்கலைக்கழகம், தனது புதிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்சி. பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.ஏ. சோசியாலஜி, எம்.ஏ. இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் மற்றும் சட்ட முதுகலை படிப்புகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி ஏப்ரல் 20. இப்பல்கலைக்கழகம், சார்க் அமைப்பின் உதவியின் மூலம் கடந்த 2010 ம் ஆண்டு எம்.ஏ. டெவெலப்மென்ட் எகனாமிக்ஸ் என்ற படிப்பை ஆரம்பித்தது.
சார்க் அமைப்பிலுள்ள 8 நாடுகளின் உதவியுடன் நடத்தப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2010 ம் ஆண்டில்தான் பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டன.
இதைப்பற்றி விரிவான விவரங்களை அறிய www.southasianuniversity.org என்ற வலைத்தளம் செல்லவும்.
