தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு வேலையில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

வெளிநாட்டு வேலையில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

வெளிநாட்டு வேலையில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்


UPDATED : ஏப் 13, 2011 12:00 AM

ADDED : ஏப் 13, 2011 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2011 12:00 AM ADDED : ஏப் 13, 2011 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பணி புரியும் ஊழியர்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் தீர்வு நிறுவனமான கெல்லி சர்வீசஸ் (Kelly Services ) நிறுவனம் சமீபத்தில் இரண்டாயிரம் பேர் மத்தியில் ஒரு கள ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வில் வெளியாகியுள்ள சில சுவையான தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.


தற்போது இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் பத்து பேரில் ஒன்பது பேர் சரியான வேலை கிடைக்கும் பட்சத்தில் தற்போது பணிபுரியும் வேலையை விட்டு விலகத் தயாராக உள்ளார்கள். இவர்கள் தேவைப்பட்டால் இந்தியாவிலிருந்து வெளி நாட்டிற்கு செல்லவும் தயாராக உள்ளார்கள்.


ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 49 சதவிகிதத்தினர் சரியான வேலைக்காக இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லத்தயாராக இருக்கிறார்கள். 39 சதவிகிதத்தினர் இந்தியாவிற்குள்ளேயே மாறத் தயாராக உள்ளார்கள். சர்வதேச ரீதியான போட்டிக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய சந்தையில் திறமை மூலமாகவே முன்னேற முடியும் என்ற புரிதல் இன்றைய இந்திய ஊழியர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறது.


வெளி நாட்டுப் பணிகளில் ஆர்வம் காட்டுபவர்களில் 36 சதவிகிதம் பேர் ஐரோப்பிய நாடுகளையும், 20 சதவிகிதத்தினர் ஆசிய பசிபிக் பிராந்தியத்தையும், 19 சதவிகிதத்தினர் வட அமெரிக்காவையும், 7 சதவிகிதத்தினர் மத்தியக் கிழக்கு நாடுகளையும் தங்களுக்கு பணி புரிய உரிய இடங்களாக வரிசைப்படுத்தியுள்ளனர்.


எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, ஹாஸ்பிடாலிடி துறைகளில் முறையே 81 மற்றும் 73 சதவிகிதத்தினர் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளத் தயாராகி வருகின்றனர். குடும்பம், நண்பர்கள், வெளி இடங்களுக்கு இடம் பெயர்வதால் ஏற்படும் செலவு, மொழி மற்றும் கலாசார மாற்றங்கள் போன்றவையே இன்றையப் பணியாளர்கள் இடம் பெயர மிகப் பெரும் பின்னடைவுகளாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பணி சேர்ப்பு மும்முரத்தில் கிரிசில் நிறுவனம் நிதி தொடர்புடைய அம்சங்களை ஆராய்வதில் இந்தியாவின் கிரிசில் (CRISIL) நிறுவனம் மிகவும் பெயர் பெற்றது. இந்த நிறுவனம் இந்திய அரசின் சிறு, மத்திய மற்றும் பெரிய நிறுவனங்களைத் தரம்பிரித்து உதவுவதோடு, சர்வதேச வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் உதவிகரமாக செயலாற்றி வருகிறது.


இந்த நிறுவனம் வழங்கும் தரச்சான்றை இன்றைய வணிக நிறுவனங்கள் பெருமையுடன் அறிவிக்கின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க கிரிசில் நிறுவனம் இந்த ஆண்டு கேம்பஸ் முறையில் 250க்கும் அதிகமான பிஸினஸ் ஸ்கூல் மாணவர்களை பணியிலமர்த்தியுள்ளது. ஏற்கெனவே பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 8 சதவிகிதமானவர்களை இந்தியாவில் பல்வேறு பகுதியிலுள்ள பிஸினஸ் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளதாக கிரிசில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வட்டம் தெரிவிக்கிறது.


சர்வதேச நிதிச் சந்தையில் போட்டியிட இன்றைய இளம் தலை முறையினரின் திறன் கட்டாயம் தேவை என்று கிரிசில் கருதியதாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரிசில் நிறுவனம் பணி வாய்ப்பு வழங்கியவர்களில் 22 பேர் ஐ.ஐ.எம்.,மிலிருந்து பட்டம் பெற்றவர்கள் ஆவர்.


கிரிசில் நிறுவனத்தின் இந்தப் புதிய முயற்சி தற்போது எம்.பி.ஏ., படித்து வரும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது. தரம் பிரித்தல், சர்வதேச ஆராய்ச்சி, உள்கட்டுமான அறிவுறுத்தும் பணி போன்ற அம்சங்களுக்கு கிரிசில் நிறுவனத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால் இன்றைய மாணவர்களுக்கு கிரிசில் நிறுவனத்தின் இந்த முயற்சி நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us