UPDATED : ஏப் 15, 2011 12:00 AM
ADDED : ஏப் 15, 2011 05:23 PM
ஒவ்வொரு 26 நொடிகளிலும் ஒரு மாணவர் தனது படிப்பை பாதியில் விட்டுவிட்டு விலகுகிறார்...இந்தத் தகவல் நமக்கு பரிச்சயமானது தானே? ஆனால் இந்த புள்ளி விபரம் சுட்டிக் காட்டுவது இந்திய கல்வியை அல்ல.... அமெரிக்காவில் என்றால் நம்ப முடிகிறதா? ஆச்சரியம் தான். ஆனால் உண்மை. தென் அமெரிக்காவிற்கு சமீபத்தில் வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா தான் இந்த புள்ளிவிபரத்தைத் தெரிவித்துள்ளார்.
இப்படி விலகுபவர்களில் பெரும்பாலானோர் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர் என்பது தான் சுடும் உண்மையாக உள்ளது. எனவே ஒபாமாவின் புதிய முயற்சியின் படி அமெரிக்க பள்ளிகளில் லத்தீன் அமெரிக்க வம்சாவளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான முயற்சிகள் தொடங்கியுள்ளன.
தரமில்லாத கல்வியைத் தரும் பள்ளிகளில் தான் இந்த பிரச்னை அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்பிரிக்க, அமெரிக்க வம்சாவளியினரில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் படிப்பை பாதியில் விட்டுவிடுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இசை, விளையாட்டு, பிற கலைத் திறன்களைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவினரின் சிறப்புத் திறன்களை வளர்க்கும் விதமாக கல்வி மாற்றப்படும் போது மாணவர்கள் பாதியில் படிப்பை விடுவது குறைந்திடும் என உத்திகளை புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ளன அமெரிக்க பள்ளிகள்.
