தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யுனெஸ்கோவுடன் கைகோர்க்கும் இந்தியா

யுனெஸ்கோவுடன் கைகோர்க்கும் இந்தியா

யுனெஸ்கோவுடன் கைகோர்க்கும் இந்தியா


UPDATED : ஏப் 20, 2011 12:00 AM

ADDED : ஏப் 20, 2011 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2011 12:00 AM ADDED : ஏப் 20, 2011 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியா உள்பட உலகளவில் போலி உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இவை அந்தந்த நாட்டு அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதை தெரியாத மாணவர்களும் அக்கல்லூரிகளில் சேர்ந்து கல்வியையும், பணத்தையும் இழக்கின்றனர். இந்த போலி நிறுவனங்களை ஒழிக்கும் முயற்சியில் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான "யுனெஸ்கோ&' இறங்கியுள்ளது.


இதற்காக இணையதளத்தில் "யுனெஸ்கோ&' பிரத்யேக பக்கத்தை தொடங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் விவரங்கள் "அப்டுடேட்&' சேகரிக்கப்பட்டு வெளியிடப் படுகின்றன. மாணவர்கள் இந்த விவரங்களை பார்த்து, உண்மையான கல்வி நிறுவனங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் போலி கல்வி நிறுவனங்களில் சேர்வது தடுக்கப்படுகிறது.


அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 32 நாடுகள், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்களை "யுனெஸ்கோ&' விடம் அளித்துள்ளன. இந்தியாவும் இது போல் அளிக்க முடிவு செய்துள்ளது.  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை துணை செயலர் சி.ஆர்.வல்சலா ஹரிகரன் தெரிவித்ததாவது: "


போலி கல்வி நிறுவனங்கள் உருவாவதை தடுக்கும் நோக்கத்திலும், மாணவர்கள் ஏமாறாமல் இருக்கவும் "யுனெஸ்கோ&' உலகளவில் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் இதில் இணையுமாறு "யுனெஸ்கோ&' அழைப்பு விடுத்துள்ளது.


இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க செல்கின்றனர். அதுபோல வெளிநாட்டு மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் யு.சி.ஜி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் விவரத்தை &'யுனெஸ்கோ&' வுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us