UPDATED : ஏப் 21, 2011 12:00 AM
ADDED : ஏப் 21, 2011 11:19 AM
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை பின்னுக்கு தள்ளி, பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை கேம்ப்ரிட்ஜ் பல்கலை பெற்றுள்ளது.
இதன்மூலம் 116 கல்வி நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் இந்த பல்கலை முதலிடத்தைப் பெற்றுள்ளது. மாணவர் திருப்தி, ஆராய்ச்சி, நுழைவு தரநிலைகள், வசதிகளுக்காக செலவு செய்தல், பட்டங்களின் தரநிலைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களில், இரண்டாவது முறையாக, வருடாந்திர அட்டவணையில், ஆக்ஸ்போர்ட் பல்கலையை, கேம்ப்ரிட்ஜ் பல்கலை பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த 2007 ம் வருடம் கேம்ப்ரிட்ஜ் முதலிடம் பெற்றது.
லண்டன் இம்பீரியல் கல்லூரி அட்டவணையில் மூன்றாமிடமும், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நான்காமிடமும், டூயர்ஹெம் ஐந்தாமிடமும், செயின்ட் ஆண்ட்ரூ ஆறாமிடமும், லண்டன் யுனிவர்சிடி காலேஜ் ஏழாமிடமும், வார்விக் எட்டாமிடமும், லன்காஸ்டர் ஒன்பதாமிடமும், பாத் பத்தாமிடமும் பெற்றுள்ளன.
