மே 12 -க்குள் பணியிட மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம்
மே 12 -க்குள் பணியிட மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம்
UPDATED : ஏப் 22, 2011 12:00 AM
ADDED : ஏப் 22, 2011 11:02 AM
தேனி: இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் மே 12 க்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங், பள்ளிகள் துவங்குவதற்கு முன் நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், மாவட்டத்துக்குள் இடம் மாறுதல் பெற விரும்புவோர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கும் மே 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
