UPDATED : ஏப் 22, 2011 12:00 AM
ADDED : ஏப் 22, 2011 01:09 PM
மனிதனைப் போன்றே உணர்ச்சிகளைக் கொண்ட கணினியை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற கணினியை உருவாக்கும் முயற்சி வெற்றியடையும் தருவாயில் உள்ளதாக இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை கணினிகள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தும் வல்லமை பெற்றவை. மேலும் வேகமாக செயல்படுதல் மற்றும் எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் வகையில் ப்ரோகிராம்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ப்ரோகிராம்கள், சில குறிப்பிட்ட வேலைகளை செய்யுமாறு அல்லது முயற்சிக்குமாறு கணினியைக் கேட்டுக்கொள்ளும். அந்த விஷயங்களை ரகசியமாக வைக்கும்படியும் கேட்டுக்கொள்ளும். மேலும், விரும்பும் நன்மைகளுக்கும், நடைமுறைகளுக்கும் இடையேயான வித்தியாசங்களை உணர்ந்து அவற்றை எவ்வாறு குறைப்பது என்ற அறிவைப் பெறும்.
இந்த ப்ரோகிராம்கள் மூலம், சாத்தியமான பயன்விளைவுகளை ஆராய்ந்து, எதிர்காலத்தை கணிக்க கணினிக்கு உதவுகிறது. இந்த முன்னேற்றமானது, சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வருவதைப் போன்றதல்ல. அதேசமயம், மனித உணர்வு நிலைக்கு, கணினியை கொண்டு வருவதற்கான ஒரு முதல் படியே இந்த முயற்சி என்று விஞ்ஞானிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
இயந்திரம் கற்கும் அடிப்படையில் ஒரு கட்டளை தொகுதியை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இந்த கட்டளை தொகுதியானது, சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, இயங்கும்போதே சிறப்பாக கற்றுக்கொள்ளும். வேலையை முடித்தப் பிறகு வரும் முடிவானது, நீங்கள் முன்கூட்டியே மாறுதல்களை அறிந்திருப்பின், அதேபோன்றே இருக்கும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், கூகுல் போன்ற நிறுவனங்கள் தங்களின் விளம்பர உபகரணங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
