UPDATED : ஏப் 22, 2011 12:00 AM
ADDED : ஏப் 22, 2011 02:44 PM
அ நிறம் | அளவு
இந்தியாவில் மாற்று திறனாளிகள் பள்ளிகளுக்கு சென்று படிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
- மாற்று திறனாளிகளுக்கான புதிய சிறப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகளவில் திறக்கப்பட வேண்டும்.
- கல்வி கற்க தேவையான தன்னம்பிக்கையை சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மூலமாக அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
- வளர்ந்த நாடுகளில் உள்ளதை போன்று அவர்கள் கல்வி கற்க நவீன வசதிகள் மற்றும் சாதனங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- கல்வி கற்க தேவையான நிதியுதவி தாராளமாக அளிக்கப்பட வேண்டும்.
- கல்வி வளர்ச்சி விகிதத்தில் மாற்று திறனாளிகளும் கல்வி கற்கும் சதவீதமும் அடங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- பெரும்பாலான இடங்களில் பயணம் செய்வதில் ஏற்படும் சிரமம் காரணமாக கல்வி கற்பதை மாற்று திறனாளிகள் தவிர்ப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. எனவே பயணம் செய்ய தேவையான வசதிகள் செய்து தர வேண்டியது அவசியம்.
