தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணித் திறனறியும் தேர்வு

பணித் திறனறியும் தேர்வு

பணித் திறனறியும் தேர்வு


UPDATED : ஏப் 25, 2011 12:00 AM

ADDED : ஏப் 25, 2011 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 25, 2011 12:00 AM ADDED : ஏப் 25, 2011 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று வேலைக்காக விண்ணப்பிக்கும் போது ஆப்டியூட் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல், குழு விவாதம், வாக்இன் போன்ற பல்வேறு உத்திகளின் மூலம் விண்ணப்பதாரர்களின் திறன்கள் அறியப்படுகின்றன. நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்றபடி இந்த முறைகளைக் கையாளுகின்றன.


இருந்த போதும் இந்தத் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேறியவர்கள் சிறந்த பணியாளர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பினால் அதற்கு முழுமையான பதில் சொல்ல முடிவதில்லை. தேர்வுகளில் மிகச் சிறந்த ஈடுபாடு காட்டியவர்கள் நிஜமான பணிச் சூழலில் வெற்றிகரமானவர்களாக இல்லாத உதாரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.


இந்த நிலையில்தான் பினிஷிங் ஸ்கூல் போன்ற பள்ளிகள் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்த பின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க வேண்டியதன் தேவை ஏற்பட்டது. இதே வழியில் கடந்த 2008 ஆம் ஆண்டில் &'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் கம்ப்யூட்டர் அடாப்டிவ் டெஸ்ட் (ஏ.எம்.சி.ஏ.டி.,) தேர்வுகளை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்தத் தேர்வுகள் இன்ஜினியரிங் தவிர பிற பாடங்களில் பட்டம் படித்தவர்களின் தகுதியை அறியும் விதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.


இந்த ஆண்டிற்கான ஏ.எம்.சி.ஏ.டி., தேர்வு சமீபத்தில் புது டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய மையங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வை மேற்கொள்பவர்களுக்கு &'செவன் ஸ்ட்ரோக் ரிபோர்ட்&' என்ற பெயரில் மதிப்பெண் தர வரிசைப் படுத்தப்படுகிறது.


பணியாற்றும் திறனை ஏழு விதமாகப் பிரித்து தேர்வு எழுதுபவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள், முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகள் என்ற தீவிர அலசலுடன் இந்த அறிக்கை தேர்வு எழுதும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது.


இந்த அறிக்கை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் பணிக்கான தகுதி விகிதத்தை (எம்ப்ளாயபிலிட்டி கோஷண்ட் (இ.க்யூ.,) அதிகரித்து அதன் மூலம் நிறுவனங்களின் காலியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அமலுக்கு வந்துள்ளது.


ஏ.எம்.சி.ஏ.டி., தேர்வுகளை மேற்கொள்ள விரும்பும் இந்த ஆண்டு இறுதியாண்டிற்குள் காலெடுத்து வைப்பவர்களும், தற்போதுதான் இறுதித் தேர்வை எழுதியவர்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் www.myamcat.com/graduate.am என்ற இணைய தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இப்போதே இந்த இணைய தளத்திற்கு சென்று பிற தகவல்களையும் அறியலாம். http://www.cisfrecruitment.org/


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us