தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வேலைநாட்கள் அறிவிப்பில் குழப்பம்

பள்ளி வேலைநாட்கள் அறிவிப்பில் குழப்பம்

பள்ளி வேலைநாட்கள் அறிவிப்பில் குழப்பம்


UPDATED : ஏப் 28, 2011 12:00 AM

ADDED : ஏப் 28, 2011 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2011 12:00 AM ADDED : ஏப் 28, 2011 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: பள்ளி வேலை நாட்கள் தொடர்பாக, தொடக்க கல்வித்துறை சரியான அறிவிப்புகளை வெளியிடாததால், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


நடப்பு கல்வியாண்டில், தொடக்க கல்வித்துறைக்கு, 224 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. இதில், 10 நாட்கள் ஆசிரியர்கள் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டன. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மற்றும் தேர்தல் பணி காரணமாக எட்டு நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டன. மேலும், தேர்தலையொட்டி, 12, 13 ஆகிய தேதிகளில் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நான்கு நாட்களையும் வேலை நாட்களாக காட்ட வேண்டும் என விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது, "பள்ளிக் கல்வித்துறை கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு, கடந்த 21ம் தேதியுடன் பள்ளி வேலை நாட்கள் முடிந்து விட்டன. ஆனால், தொடக்க கல்வித்துறை பள்ளிகளுக்கு மட்டும் தெளிவான அறிவிப்புகள் இல்லை. மாவட்டத்தில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் என இரண்டு அதிகாரிகள் இருக்கின்றனர். இவர்களில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர்.


யாருடைய உத்தரவை பின்பற்றுவது என தெரியவில்லை. நான்கு நாட்களும் வேலை நாட்களாக காட்ட வேண்டுமெனில், மே மாதத்திலும் பணிபுரிய வேண்டும். அப்படி பணிபுரிய நாங்கள் தயாராக இருந்தாலும், அப்போது மாணவர்கள் இருக்க மாட்டார்கள். இதனால், ஒரே குழப்பம் தான் நிலவுகிறது. இந்த பிரச்னையில், தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us