தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற அருப்புகோட்டை மாணவர் வெற்றி

மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற அருப்புகோட்டை மாணவர் வெற்றி

மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற அருப்புகோட்டை மாணவர் வெற்றி


UPDATED : ஏப் 28, 2011 12:00 AM

ADDED : ஏப் 28, 2011 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2011 12:00 AM ADDED : ஏப் 28, 2011 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். மையத்தில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பயிற்சி பெற்ற பிரபாகரன், கடந்த 2008ம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துகொண்டு, ஐ.டி.இ.எஸ். பணி ஒதுக்கீடு பெற்றுள்ளார்.


யு.பி.எஸ்.சி.(மத்திய பணியாளர் தேர்வாணையம்) நடத்தும், சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வில், கடந்த 2008ம் ஆண்டு அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் கலந்து கொண்டார். 2009ம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில், சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிறுத்தி வைத்தது. கடந்த 2006, 2007, 2008ம் ஆண்டுக்கான இரண்டாவது தேர்வு பட்டியல் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது.


இதில் பிரபாகரனின் பெயர், 2008ம் ஆண்டிற்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. சில நாட்களுக்கு முன் மத்திய பணியாளர் அமைச்சகம், இவருக்கு ஐ.டி.இ.எஸ். (இந்தியன் டிபன்ஸ் எஸ்டேட்ஸ் சர்வீஸ்) பணியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. விரைவில், டில்லியில் நடக்க உள்ள பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபாகரன், மனிதநேய ஐ.ஏ.எஸ். கல்வி மைய நிறுவனர் சைதை துரைசாமியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இவ்வாறு மைய இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us