UPDATED : ஏப் 29, 2011 12:00 AM
ADDED : ஏப் 29, 2011 03:54 PM
அ நிறம் | அளவு
பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் இருந்து
பள்ளிக் கல்வித்துறை வெப்சைட்டில்
(www.pallikalvi.in), சமச்சீர் கல்வி திட்டத்தில், 10ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. எனினும், சர்வர் பிரச்னை காரணமாக, பாடப் புத்தகங்களை, மாணவர்களால் பார்க்க முடியவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இணையதளத்தில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்கள், லிங்க் பெற்று, பாடப் புத்தகங்களை வெளியிட்டன. கட்டணம் அடிப்படையில், பாடப் புத்தகங்களை, டவுண்லோடு செய்யும் வகையில், அவற்றில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து, தினமலர் நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியானது.இதையடுத்து
, தனியார் வெப்சைட்களின் இணைப்பை உடனடியாக அதிகாரிகள் துண்டித்தனர். அதன்பின், வழக்கம்போல் கல்வித்துறை வெப்சைட்டில் பாடப் புத்தகங்கள், டவுண்லோடு ஆகவில்லை. இதனால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே, பாடநூல் கழக இணையதளத்திலும், பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவி (பொறுப்பு) தெரிவித்துள்ளார். அதன் முகவரி: www.textbooksonline.tn.nic.in