விடைத்தாள் திருத்தும் பணி விரைந்து முடிக்க ஏற்பாடு
விடைத்தாள் திருத்தும் பணி விரைந்து முடிக்க ஏற்பாடு
UPDATED : ஏப் 29, 2011 12:00 AM
ADDED : ஏப் 29, 2011 11:24 AM
தமிழகத்தில் நடந்து வரும் விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியை விரைந்து முடிக்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து கல்வி மாவட்டத்தில் உள்ள மையங்களில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மொழித்தாள்களான ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றிற்கு முதல் தாள், இரண்டாம் தாள் என இரு விடைத்தாள்கள் திருத்தம் செய்வதால் தாமதம் ஏற்படுகிறது.
மற்ற கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் பணி விரைவில் முடிந்து விடுகிறது. பல கல்வி மாவட்டங்களில் மே 4 வரை நடக்க வேண்டிய முகாம்கள் அதற்கு முன்னதாக முடிவடையும் நிலையில் உள்ளது.
அதிக விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாமல் இருக்கும் மையங்களிலிருந்து முகாம் முன் கூட்டியே முடியும் மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பப்படவுள்ளது. விடைத்தாள் திருத்தும் முகாம்களை மே. 4 க்குள் முடித்து திட்டமிட்டபடி மே 24 ல் தேர்வு முடிகள் வெளியிட தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
