தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்


UPDATED : ஏப் 30, 2011 12:00 AM

ADDED : ஏப் 30, 2011 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2011 12:00 AM ADDED : ஏப் 30, 2011 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு


அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள கொடுத்த கால அவகாசம் மே 31ஆம் தேதிக்குள் முடிவடைவதன் அடிப்படையில், சுமார் 2500 பள்ளிகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது.


மே மாதம் 31ஆம் தேதிக்குள் பள்ளிக்கு என்று சொந்தமாக நிலம், கட்டடம், நூலகம் ஆய்வுக்கூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தாவிட்டால் பள்ளிகள் மூடப்படும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2003ஆம் ஆண்டு கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்தது.


2005ஆம் ஆண்டு இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத 1,500 பள்ளிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை அமைத்துக் கொள்ள வசதியாக தமிழக அரசு மே மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது.


இதையடுத்து அனைத்து நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்குநர் நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.


அரசு விதிமுறைகளின்படி, செயல்படாத 300 நர்சரி, பிரைமரி பள்ளிகள், குறைவாக நிலம் உள்ள 2000 மெட்ரிக் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீறி செயல்பம் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பம், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி நாள் ஒன்றுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து மெட்ரிக்கலேஷன் இயக்குநர் அந்தந்த மாவட்டங்களில் கூட்டம் போட்டு விளக்கம் அளித்தும் வருகிறார். இதனால் இந்த ஆண்டு 2,500 பள்ளிகள் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us