தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு


UPDATED : மே 02, 2011 12:00 AM

ADDED : மே 02, 2011 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2011 12:00 AM ADDED : மே 02, 2011 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாடு முழுவதும் நேற்று நடக்கவிருந்த, இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது தொடர்பாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரும், பீகாரை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஒரு வினாத்தாள் ஆறு லட்ச ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. வினாத்தாள் லீக் காரணமாக தேர்வு நேரம் மாற்றப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.


என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, அகில இந்திய நுழைவுத் தேர்வு நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 26 ஆயிரத்து 816 இடங்களுக்கு, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆன்-லைனில் தேர்வு எழுதவும் விண்ணப்பித்திருந்தனர்.


நாடு முழுவதும் 1,600 தேர்வு மையங்களில், அந்த மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு, அதிகாலையிலேயே ஏராளமான மாணவ, மாணவியர் குவிந்தனர். காலை 9.30 மணிக்கு பி.இ., - பி.டெக்., முதல்தாளும், மதியம் 2 மணிக்கு பி.ஆர்க்., - பி.பிளான் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது.


இந்த தேர்வுக்கான வினாத்தாள் தலா ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து லக்னோ, மீரட், கான்பூரில் உள்ள பயிற்சி மையங்களில் அதிரடிப் படையினர் சோதனையிட்டனர். லக்னோ மற்றும் கான்பூரில் உள்ள பயிற்சி மையங்களில் வினாத்தாள்களை அதிரடிபடையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வினாத்தாள்களை சி.பி.எஸ்.இ.யிடம் போலீசார் ஒப்படைத்தனர். வெளியானது உண்மையான வினாத்தாள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக உ.பி., மற்றும் பீகார் பயிற்சி மையங்களை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் நேற்று புதிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.


மாணவர்கள் தவிப்பு: தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், சென்னையில், அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, மயிலாப்பூரில் பி.எஸ். பள்ளி உட்பட ஐந்து இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.


அதிகாலையிலேயே தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்கள், தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக ஒட்டப்பட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காலை 9.30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு, பிற்பகல் 12 மணிக்கு துவங்கும் என்று நோட்டீஸ் பலகை மட்டும் வைக்கப்பட்டது. இந்நிலையில், லீக் விஷயம் தெரியவந்தது. இதையடுத்து தேர்வு நடக்கும் மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின், காலையில் நடக்கவிருந்த முதல் தாள் மதியம் 12 மணிக்கும், மதியம் துவங்கும் தேர்வு இரவு 7 மணிக்கும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், புனே ராணுவ ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான, அகில இந்திய நுழைவுத் தேர்வும், நேற்று மதியம் 2.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த மாணவர்கள், ஏதாவது ஒரு தேர்வை மட்டும் எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சிலர் இன்ஜினியரிங் தேர்வை புறக்கணித்துவிட்டு, ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை வளாகத்தில் நடந்த, மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதச் சென்றனர். இந்தக் குழப்பங்கள் பலரையும் நோகடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us