கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ஐந்து லட்சம் வேலை இருக்கு
கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ஐந்து லட்சம் வேலை இருக்கு
UPDATED : மே 02, 2011 12:00 AM
ADDED : மே 02, 2011 03:25 PM
கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது, என எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியை வடிவு பேசினார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் எதிர்காலம் குறித்து, அவர் பேசியதாவது: உலகில் கம்ப்யூட்டர் அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உள்ளன. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறை, தொழில் சார்ந்த படிப்புகளாக இன்ஜினியரிங் டெக்னாலஜி உள்ளது.
மென்பொருள், உற்பத்தி, வடிவமைப்பு, தரம், சந்தைப்படுத்துதல், பராமரித்தல் உள்ளிட்ட அனைத்திலும் கம்ப்யூட்டர் டெக்னாலஜி துறை முழுமையாக பயன்படுகிறது. சாப்ட்வேர் டெவலப்மெண்ட், மல்டி மீடியா, அனிமேஷன், ஐ.டி., பி.பி.ஓ., இன்சூரன்ஸ், மெடிக்கல், வங்கி என அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் அறிவியல் துறை தேவை உள்ளது.
இந்தியாவில் உள்ள இளைஞர்களின் கணிதம், அறிவியல், தொடர்புகள், இந்தியாவில் உள்ள கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகள், இந்திய இளைஞர்களுக்கு இத்துறை சார்ந்த தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, வெளிநாட்டில் இருந்து கூட மாணவர்கள், இந்தியாவில் படிக்க வருகின்றனர். 2011-12ம் ஆண்டில் மட்டும் ஐந்து லட்சம் பேருக்கு இத்துறையில் வேலைவாய்ப்பு உள்ளது.
இதற்கு அடிப்படை இளங்கலை கல்வி, பல்துறை சார்ந்த திறமை, துறை சார்ந்த கூடுதல் படிப்பு தேவை. இத்துறையில் படிக்க, கட்டமைப்பு, அங்குள்ள ஆசிரியர்கள், தரமான கல்வி திட்டம், அங்கு படித்தவர்களுக்கு கிடைத்த வேலைவாய்ப்பு என்ன என்பது குறித்து ஆய்வு செய்து கல்லூரியை தேர்வு செய்யுங்கள். பிளஸ் 2 தேர்வு என்பது பொதுவான ஒன்று. இனி நீங்கள் படிக்கும் கல்வியே உங்கள் வாழ்வை தீர்மானிக்கும். எனவே, உங்களுக்கு விருப்பமான துறையில், சரியான கல்லூரியில் சேர்ந்து படியுங்கள், என்றார்.
