மதுரைக்கு அறிவியல் ரயில் வருகை : மாணவர்கள் பார்வையிடலாம்
மதுரைக்கு அறிவியல் ரயில் வருகை : மாணவர்கள் பார்வையிடலாம்
UPDATED : மே 03, 2011 12:00 AM
ADDED : மே 03, 2011 01:29 PM
மதுரை ரயில்வே ஸ்டேஷன் எட்டாவது பிளாட்பாரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நிற்கும் அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயிலை, காலை 10 முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் கண்டுகளிக்கலாம்.
மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்திய ரயில்வே இந்த அறிவியல் கண்காட்சி ரயிலை இயக்குகிறது. இந்த ரயிலை 2007 அக்டோபர் 30ல் பிரதமர் மன்மோகன்சிங், ஜெர்மன் அறிவியல் தொழில்நுட்ப துறை வேந்தர் ஆங்கேலா மெர்கெல் துவக்கி வைத்தனர்.
16 கோச் கொண்ட முழுவதும் ஏசியிலான இந்த ரயிலில் அறிவியல் தொழில்நுட்பங்களை விளக்கும் மாதிரிகள், படங்கள், கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ரயிலை பார்வையிடுவோர், மொபைல் போன், கேமிரா, பை, தீப்பெட்டி, சிகரெட், பீடி, புகையிலை, தண்ணீர் பாட்டில்கள் போன்றவை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம்.
இந்த ரயில் மே 6, 7 தேதிகளில் திருநெல்வேலி ஜங்ஷனில் நிற்கும். இத்தகவலை தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
