தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறையை ஏற்க மறுத்த தமிழக அரசு

ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறையை ஏற்க மறுத்த தமிழக அரசு

ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறையை ஏற்க மறுத்த தமிழக அரசு


UPDATED : மே 04, 2011 12:00 AM

ADDED : மே 04, 2011 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2011 12:00 AM ADDED : மே 04, 2011 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: பொறியியல் படிப்பில் சேர, குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் இருக்க வேண்டும் என்று அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ) விதித்த நிபந்தனையை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, அதை திரும்ப பெற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.


ஏ.ஐ.சி.டி.இ. வகுத்துள்ள புதிய நடைமுறைகளை அமல்படுத்தினால், எஸ்சி/எஸ்டி/எம்.பி.சி. மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் பழைய விதிமுறையின்கீழ், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்களும், ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 35 சதவீத மதிப்பெண்களும் தகுதி அளவாக 2010-2011 ம் ஆண்டில் வரையறுக்கப்பட்டது.


அதேசமயம், ஏ.ஐ.சி.டி.இ. விதிகளின்படி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீதமும், மற்ற அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 45 சதவீதம் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த மாநில அரசாங்கம், இந்த புதிய விதிமுறையால், ஓ.பி.சி./எஸ்சி/எஸ்டி. மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.


எனவே வரும் 2011-2012 கல்வியாண்டிற்கும் பழைய மதிப்பெண் விகிதமே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனது புதிய விதிமுறையை ஏ.ஐ.சி.டி.இ. திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us