தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முக்கிய நுழைவுத் தேர்வுகள் 2011

முக்கிய நுழைவுத் தேர்வுகள் 2011

முக்கிய நுழைவுத் தேர்வுகள் 2011


UPDATED : மே 05, 2011 12:00 AM

ADDED : மே 05, 2011 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2011 12:00 AM ADDED : மே 05, 2011 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2011-12 கல்வி ஆண்டில் மேலாண்மை, அறிவியல், பேஷன், சட்டம் பயில விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய முக்கிய நுழைவுத் தேர்வுகளின் விவரங்களை அறிவோம்.


மேலாண்மை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள்


சிம்போசிஸ் நுழைவுத் தேர்வு - மே 7ம் தேதி நடைபெறும். இன்டிகிரேட்டட் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் மே 18ஆம் தேதி நடக்கிறது. நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் மே 22லும், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மே 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறும். மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் அன்ட் ஸ்கில்ஸ் டெஸ்ட் செப்டம்பர் 18ல் நடக்கிறது.


அறிவியல்
எம்.எஸ்சி.க்கான ஜே.ஏ.டி. 2011 நுழைவுத் தேர்வு மே 8ம் தேதி நடைபெற உள்ளது.  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் ஒருங்கிணைந்த பயோ டெக்னாலஜி நுழைவுத் தேர்வு மே மாதம் 20ஆம் தேதி நடைபெறுகிறது.  நெஸ்ட் எனப்படும் நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்க்ரீனிங் தேர்வு மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இவை அனைத்திற்கும் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கால அவகாசம் முடிந்துவிட்டது.


பேஷன் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பெங்களூரில் உள்ள ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் அன்ட் டிசைன் நடத்தும் நுழைவுத் தேர்வினை எழுதலாம். இப்படிப்பில் சேர விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே மாதம் 15ஆம் தேதியாகும். நுழைவுத் தேர்வு ஜுலை 8ஆம் தேதி நடைபெறுகிறது.


சட்டம் பயில விரும்புபவர்கள் எழுத வேண்டிய தேர்வான காமன் லா அட்மிஷன் டெஸ்ட் மே மாதம் 15ஆம் தேதி நடக்கிறது.


இதே நாளில், ஜோத்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வும், ராய்பூரில் உள்ள ஹிதயத்துல்லா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வும், பாட்னாவில் உள்ள சாணக்யா சட்ட பல்கலைக்கழகத்தின் நழைவுத் தேர்வும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us