தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில தடகள ஓட்டப்பந்தய போட்டி காஞ்சி மாணவிக்கு வெள்ளி பதக்கம்

மாநில தடகள ஓட்டப்பந்தய போட்டி காஞ்சி மாணவிக்கு வெள்ளி பதக்கம்

மாநில தடகள ஓட்டப்பந்தய போட்டி காஞ்சி மாணவிக்கு வெள்ளி பதக்கம்


UPDATED : நவ 21, 2026 04:29 AM

ADDED : நவ 21, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 04:29 AM ADDED : நவ 21, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
சென்னையில் நடந்த 'அமிட்டி பிரீமியர் லீக் - 2026' தடகள 5,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி வினிதா, 19, வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், சென்னை அமிட்டி பல்கலை சார்பில், மாநில அளவிலான 'அமிட்டி பிரீமியர் லீக் - 2026' தடகள போட்டிகள் சமீபத்தில் நடந்தன.

இதில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இளங்கலை தமிழ் துறை மாணவி வினிதா, மகளிருக்கான 5,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் கல்லுாரிக்கு பெருமை சேர்த்த மாணவி வினிதாவை, காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிர்வாகத்தினர், கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us