தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை

கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை

கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை


UPDATED : ஜூலை 09, 2026 05:16 PM

ADDED : ஜூலை 09, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 05:16 PM ADDED : ஜூலை 09, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கம் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரிக்கலாம்பாக்கத்தில், கடந்த 40 ஆண்டிற்கு மேலாக அரசு பள்ளி இயங்கி வருகிறது. துவக்கப் பள்ளியிலிருந்து படிப்படியாக சில ஆண்டிற்கு முன் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளில், இருபதுக்கும் மேற்பட்ட குழு மற்றும் தனித்திறன் விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், இப்பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. ஆனால், ஒரு விளையாட்டு ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார். அவர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்களுக்கு கேரம், செஸ் உள்ளிட்ட உள்விளையாட்டுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். பள்ளியின் ஆண்டு விளையாட்டு போட்டிகள் அதே பகுதியில் உள்ள கோட்டைத் திடலில் நடக்கிறது.

உடல் திறன் போட்டிகள் விளையாட மைதானம் இல்லாததால், மாணவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை முழுமையாக இழந்து விட்டனர். எனவே, கரிக்கலாம்பாக்கம் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி, மாணவர்களின், திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கல்வித்துறை ஏற்படுத்தி தர வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us