காசி தமிழ் சங்கமம் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு
காசி தமிழ் சங்கமம் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு
UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 10:38 AM
சென்னை:
காசி தமிழ் சங்கமம் 2.0 - 2023ன் அனுபவ பகிர்வு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, கவர்னர் ரவி பரிசு வழங்கி பாராட்டினார்.தமிழக கவர்னர் மாளிகை சார்பில், காசி தமிழ் சங்கமம் 2.0 - 2023ல் பங்கேற்றவர்கள் இடையே அனுபவ பகிர்வு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்களின், வெற்றியாளர்களை நிபுணர் குழு தேர்வு செய்தது.மாணவர்கள் குழுவில், நான்கு பேர்;
விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் குழுவில் மூவர்; வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் குழுவில் மூவர்; எழுத்தாளர்கள் குழுவில் நான்கு பேர்; ஆசிரியர்கள் குழுவில் ஐந்து பேர்; ஆன்மிக குழு மற்றும் தொழில் முறை குழுவில் தலா மூவர், முதல் மூன்று பரிசுகளுக்கு குழு வாரியாக தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் ரவி, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் கிர்லோஷ்குமார், ஐ.ஐ.டி., சென்னை இயக்குனர் காமகோடி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.