கே.சி.டி., மாணவர்களின் படகு சர்வதேச போட்டியில் பங்கேற்பு
கே.சி.டி., மாணவர்களின் படகு சர்வதேச போட்டியில் பங்கேற்பு
UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 10:54 AM

கோவை:
குமரகுரு கல்லுாரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட எரிசக்தி படகு, சர்வதேச போட்டியில் பங்கேற்கிறது.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியை சேர்ந்த 12 மாணவர்கள், ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ள மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச் 2024 போட்டியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பங்கேற்கின்றனர்.
இது குறித்து, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியை சேர்ந்த மாணவர் குழுவான சீ சக்தி குழுவின் செயல்பாட்டு தலைவர் மாணவி ஹேமலதா, பைலட் யுக பாரதி, கல்லுாரி முதல்வர் எழிலரசி, மாணவர்கள் ரோஷன் மனோஜ், கிரிதேஷ் சுதாகர் ஆகியோர் தெரிவித்ததாவது:
உலகம் முழுவதும் இருந்து 21 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், ஆற்றல் பிரிவில் கே.சி.டி., பங்கேற்கிறது. படகின் காக்பிட், புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி, மிகவும் திறமையான மற்றும் நீடித்த உந்துவிசை அமைப்பை வடிவமைக்க வேண்டும்.
நாங்கள் வடிவமைத்துள்ள படகிற்கு, யாலி 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படகு, ஒவ்வொன்றும் 6.5 கிலோ வாட் திறன் கொண்ட இரட்டை உந்துவிசையைக் கொண்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.