UPDATED : ஏப் 23, 2025 12:00 AM
ADDED : ஏப் 23, 2025 10:45 AM

சென்னை:
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டபணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவர் மாநில அளவில் முதலிடம். அகில இந்திய அளவில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் முதலிடம்
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியின் இயக்குனர் பூமிநாதன் கூறியதாவது:
யுபிஎஸ்சி ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அகில இந்திய குடிமைப்பணிதேர்வு முடிவுகளில் கிங்மேக்கர்ஸ் அகாதெமியின் மாணவர் சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தில் பயின்ற 138 மாணவர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்திய அளவில் முதல் ஐம்பது இடங்களுள் ஐந்து மாணவர்கள் கிங்மேக்கர்ஸ் மாணவர்கள் ஆவர். கிங்மேக்கர்ஸ் மாணவரான அபிஷேக் வஷிஸ்டா 14 ஆம் இடமும், விபோர் பரத்வாஜ் 19 ஆம் இடமும், சிவச்சந்திரன் 23 ஆம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

