கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளை சேலத்தில் திறப்பு
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளை சேலத்தில் திறப்பு
UPDATED : மார் 04, 2025 12:00 AM
ADDED : மார் 04, 2025 10:31 AM
சேலம்:
கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடமி, சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை, டெல்லி, மதுரை, திருச்சி மற்றும் கோவை வளாகங்களை தொடர்ந்து சேலம் மாநகரில் உள்ள கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளையை முன்னாள் அரசு தலைமை செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த இறையன்பு அவர்கள் ஐ .ஏ. எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் வழங்கியதோடு மாணவர்களின் மத்தியிலும் உற்சாக ஊக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இடையே மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்த மையத்தின் இயக்குனர்,கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியின் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை கிளைகளில் 2025-26-ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் (ரெகுலர் மற்றும் வார இறுதி )தொடங்க இருப்பதால் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களின் ஐ ஏ எஸ் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு நேரடி ஆலோசனையும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பயிற்சியில் சேர விரும்புவோர் :
கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடமி, சேலம் கிளை: 2வது மாடி, சாந்தி பிளாசா, 1/5, பிருந்தாவன் ரோடு,
பேர்லேண்ட்ஸ், சேலம்- 636004 |அலைபேசி எண்:9444227273. |www.kingmakersiasacademy.com.