UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 10:48 AM

கோவை:
பாரதியார் பல்கலையில் பள்ளி மாணவர்களுக்கான, குறிஞ்சி கோடைக்கால முகாம், ஏப்., 22 முதல் 26 வரை நடக்கிறது.
இம்முகாமில், கலை, அறிவியல், தொழில்நுட்பம், உயிர் தகவலியல் உள்ளிட்ட பல்துறை சார்ந்தும், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வல்லுனர்கள், விஞ்ஞானிகள் நேரடியாக பங்கேற்று பேச உள்ளனர்.
ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இம்முகாம் பயனுள்ளதாக இருக்கும். காலை, 10:00 மணி முதல் மாலை, 3:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி கட்டணமாக ஒருவருக்கு, 800 ரூபாய் நிர்யிக்கப்பட்டுள்ளது. தங்குமிடம், பெற்றோருக்கு 300 ரூபாயும், மாணவருக்கு, 300 ரூபாயும் நாள் ஒன்றுக்கு செலுத்தவேண்டும். 22ம் தேதி காலை 9:00 மணி முதல் பதிவு செய்து பங்கேற்கலாம்.
மேலும், விபரங்களுக்கு 9865076485/ 94429 96465 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.