அரசு கலை கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு கலை கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : நவ 11, 2026 01:45 PM
ADDED : நவ 11, 2026 01:46 PM
அ நிறம் | அளவு
கரூர்:
கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் மாவட்ட நீதிபதி தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அனுராதா பேசினார்.
தேசிய சட்டப்பணிகள் தினத்தின் முக்கியத்துவம், பாமர மக்களும் பயன்பெறும் வகையில் இலவச சட்ட உதவி பெறுவதற்கான எளிய வழிமுறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
