ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் விரிவுபடுத்தப்படுகிறது லெனாக்ஸ்
ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் விரிவுபடுத்தப்படுகிறது லெனாக்ஸ்
UPDATED : பிப் 11, 2025 12:00 AM
ADDED : பிப் 11, 2025 05:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னையில் ஹெச்விஏசிஆர் சொன்யூஷன்ஸ் எனப்படும் வெப்பமாக்கல், காற்றோட்டம், ஏர்கண்டிஷனிங் மற்றும் குளிர்பதன (HVACR) நிறுவனமான லெனாக்ஸ், சென்னையில் உள்ள தனது மையத்தை 6 மில்லியன்டாலர் முதலீட்டில் விரிவுபடுத்துகிறது.
புதியஅலுவலகத்தில் நவீன கூட்டுப் பணி நிலையங்கள், பெரிய கட்டுப்பாடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு பகுதி, பிரத்யேக தனிமைப் பகுதிகள், ஓய்வுஅறைகள், தாய்மைக்கான சிறப்பு அறை மற்றும் பயிற்சி அறைகள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயல் துணைத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான பிரகாஷ் பேடாபுடி கூறுகையில், 15 ஆண்டுகளில், லெனாக்ஸ் இந்தியாவில் 14 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது, என்றார்.