ஒன்று சேர்வோம் எழுவோம்- ஸ்ரீராம் பைனான்சின் பிரச்சாரம்
ஒன்று சேர்வோம் எழுவோம்- ஸ்ரீராம் பைனான்சின் பிரச்சாரம்
UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 10:15 AM

சென்னை:
ஸ்ரீராம் பைனான்ஸ், ராகுல் டிராவிட்டுடன் இணைந்து ஒன்று சேர்வோம் எழுவோம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு நாம் ஒன்று சேர்ந்தால், நாம் உயர்வோம் என்ற ஸ்ரீராம் பைனான்சின் நம்பிக்கையை இந்த பிரசாரம் எடுத்துரைக்கிறது. ஸ்ரீராம் பைனான்ஸ் புரோகபடிலீக்குடன் இணைந்து இப்பிரசாரத்தை விளம்பரப்படுத்துகிறது.
ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குநர் எலிசபெத் வெங்கடராமன் கூறுகையில், நிலையான வைப்புத் தொகை, வாகனங்களுக்கு நிதியளித்தல், சிறுவணிகங்களை பெருக்குவதற்காக தங்கம் அல்லது தனிநபர் கடன்கள் போன்றவற்றின் மூலம் நிதிகளை விரைவாக பெறுவதற்கு ஒன்றாக, நாங்கள்உயர்கிறோம் என்பது அடையாளப்படுத்துகிறது. ஏழு மொழிகளில் வடிவமைக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பலதரப்பட்ட பார்வையாளர்களுடன் இணைக்கிறது, என்றார்.
பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் மதன்கார்க்கி, விளம்பரப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான வரிகளை எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், ஸ்ரீராம் பைனான்சின் பிராண்ட் தூதராக உள்ளார். பத்மஸ்ரீ நஸ்ருதீன்ஷா இந்தியில் விளம்பரப்படத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.