UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பார்மஸி கவுன்சில் சார்பில், 2008ல் நாட்டில், பார்ம்.டி., என்ற மருந்தியல் ஆராய்ச்சி படிப்பு துவக்கப்பட்டது.
இந்த ஆறு ஆண்டு படிப்பு, தமிழகத்தில் 32 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பல மாணவர்கள் அங்கு படிப்பை நிறைவு செய்துள்ளனர். அதேபோல, சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பார்ம்.டி., படிப்பை துவக்க வேண்டும்.
மேலும், பி.பார்ம்., படிப்பானது, சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே உள்ளது. அந்த படிப்பை அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் துவங்க வேண்டும். அதற்கு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருந்தாளுனர் பட்டதாரி சங்கத்தின் தமிழக கிளை தலைவர் ஜி.செல்வராஜ் கூறியுள்ளார்.