தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நுாலக வார விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நுாலக வார விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நுாலக வார விழா


UPDATED : நவ 19, 2026 02:44 PM

ADDED : நவ 19, 2026 02:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 02:44 PM ADDED : நவ 19, 2026 02:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நுாலகத்துறை சார்பில், 59ம் ஆண்டு நுாலக வார விழா, தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமையில் நடைபெற்றது.

அரவக்குறிச்சி நுாலகர் இளைய சபரி வரவேற்று, புதிய நுாலகத்தின் சிறப்புகளை எடுத்து கூறி, அனைவரும் தவறாது வருகை புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் புதிய மாணவர்களை நுாலக உறுப்பினராகவும் சேர்க்க உறுதி அளித்தார். மேலும் நுாலக ஆர்வலர் ரூபன் 'நுாலகங்கள் நமது அறிவை விரிவடைய செய்கின்றன. ஒவ்வொருவரும் நுாலகத்திற்கு சென்று அறிவை விரிவு செய்ய வேண்டும்' என்பதை எடுத்துரைத்தார்.

மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நுாலகத் துறை சார்பில், சுகன்யா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மகிழ்முற்ற செயலாளர் ஷகிலா பானு நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்றதோடு, தவறாது நுாலகம் செல்வதாக உறுதியளித்தனர்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us