UPDATED : நவ 02, 2026 06:06 PM
ADDED : நவ 02, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
கோவை:
பாரதியார் பல்கலை இயக்குனர் உள்ளிட்ட ஐந்து முக்கிய காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்கலை தொலைதுார மற்றும் இணையவழிக் கல்வி மைய இயக்குனர், கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், கல்லுாரி மேம்பாட்டு குழு டீன், தேசிய மாணவர் படை திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகிய ஐந்து பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், வயது வரம்பு உள்ளிட்ட தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள், பல்கலையின் www.b-u.ac.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவ., 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
