UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:47 PM
கலபுரகி:
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70க்கும் மேற்பட்ட மாணவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கலபுரகி, குஷ்டகியின், பிஜகல் கிராமத்தில் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு நேற்று மதியம் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
70க்கும் மேற்பட்ட மாணவர்கள், தோடிஹாளா ஆரம்ப சுகாதார மையம், குஷ்டகி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிராமத்தில் தற்காலிக சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு இல்லாத மாணவர்களுக்கு, சுகாதர ஊழியர்கள் இந்த மையத்தில் சிகிச்சை அளித்தனர்.
மாணவர்கள் சாப்பிட்ட உணவில், ஏதாவது பிரச்னை இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் மருத்துவமனைக்கு வந்து, பார்வையிட்டு, தகவல் கேட்டறிந்தனர்.