தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு தொடக்க விழா

எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு தொடக்க விழா

எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு தொடக்க விழா


UPDATED : அக் 10, 2026 01:54 PM

ADDED : அக் 10, 2026 01:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:54 PM ADDED : அக் 10, 2026 01:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியின் மேலாண்மைத் துறையில், (எம்.பி.ஏ.,), முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது.

கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோழிக்கோடு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் வெங்கடராமன் பேசுகையில், “மாணவர்கள் வெறும் பட்டங்களை மட்டும் பெறாமல், சவாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களாகவும், குழுவாக இணைந்து திறம்பட செயல்படுபவர்களாகவும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு கேள்வி கேட்கும் ஆர்வம், தகவல் தொடர்பு திறன் மற்றும் புத்தாக்க சிந்தனை மிகவும் அவசியமாகும்,” என்றார்.

நிகழ்ச்சியில், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்தி ஸ்ரீ, செயல் இயக்குனர் குப்பு சாமி, முதல்வர் முருகன், கல்லுாரி மேலாண்மைத் துறை தலைவர் வனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us