எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி அதானி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி அதானி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : ஆக 14, 2026 05:17 PM
ADDED : ஆக 14, 2026 05:19 PM
கரூர்:
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், அதானி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கல்லுாரியின், கட்டட பொறியியல் துறையும், அதானி சிமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, தொழில்துறை அனுபவம் மற்றும் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் நோக்கில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கட்டட பொறியியல் துறை மாணவர்களுக்கு பல்வேறு தொழில்துறை சார்ந்த வாய்ப்புகள் உருவாக உள்ளன. தொழிற்பயிற்சி வாய்ப்பு, தொழில்துறை சார்ந்த பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு, தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் ஆகியவை முக்கிய அம்சங்களாக அமையும்.
இந்நிகழ்ச்சியில் கல்லுாரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலாளர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்தி ஸ்ரீ, செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், அதானி நிறுவனம் மண்டல தொழில்நுட்பத் தலைவர் இளந்தென்றல், கட்டடப் பொறியியல் துறைத் தலைவர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
