தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பிளஸ் 2 மட்டுமே படித்து மருத்துவம் பார்த்தவர் கைது

பிளஸ் 2 மட்டுமே படித்து மருத்துவம் பார்த்தவர் கைது

பிளஸ் 2 மட்டுமே படித்து மருத்துவம் பார்த்தவர் கைது


UPDATED : மே 23, 2025 12:00 AM

ADDED : மே 23, 2025 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2025 12:00 AM ADDED : மே 23, 2025 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்றம்பள்ளி:
நாட்றம்பள்ளி அருகே, பிளஸ் 2 மட்டும் படித்துவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் பிஸ்வாஸ், 35. இவர், சண்டியூரில் கிளினிக் வைத்து, மூலம், பவுத்திரம், கால்வெடிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தார். கடந்த 17ம் தேதி ஆனந்தராமன் என்பவர் அவரிடம் சிகிச்சைக்கு சென்றார். பிஸ்வாஸ் முறையாக டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சையளிப்பது தெரிந்து, ஆனந்தராமன் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநரிடம் புகார் செய்தார்.

அதன்படி நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பஸ்வாஸின் கிளினிக்கிற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர், பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது உறுதியானது. மருத்துவக் குழுவினரின் புகார்படி, நாட்றம்பள்ளி போலீசார், போலி டாக்டர் பிஸ்வாஸை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us