UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 10:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி கீழநடுத்தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன் 22. சென்னையில் தனியார் சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார்.
டிச., 20 வயலுக்கு டூவீலரில் சென்று விட்டு திரும்பும் போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கோடாரங்குளத்தில் சிவராமன் 25, என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிகண்டனின் உறவினர் கைது செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கும் வகையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாயாண்டியை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.