தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மணக்குள விநாயகர் இன்ஜி., கல்லுாரிக்கு தேசிய அளவிலான 5 விருதுகள்

மணக்குள விநாயகர் இன்ஜி., கல்லுாரிக்கு தேசிய அளவிலான 5 விருதுகள்

மணக்குள விநாயகர் இன்ஜி., கல்லுாரிக்கு தேசிய அளவிலான 5 விருதுகள்


UPDATED : செப் 29, 2026 03:00 PM

ADDED : செப் 29, 2026 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 03:00 PM ADDED : செப் 29, 2026 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
எடுஸ்கில்ஸ் அறக்கட்டளை சார்பில் நடந்த மாநாட்டில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் செயல்பாடுகளை பாராட்டி 5 விருதுகள் வழங்கப்பட்டது.

எடுஸ்கில்ஸ் அறக்கட்டளை சார்பில் மாநாடு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடந்தது. இதில் கல்வி, தொழில், அரசு மற்றும் மனிதவளத் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் தேசிய அளவில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு சிறந்த செயல்திறன் மிக்க பொறியியல் கல்லுாரிக்கான விருதும், ஐந்தாண்டு கூட்டாண்மை விருதும் வழங்கப்பட்டது.

மேலும், மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில்துறை சார்ந்த கற்றல் மற்றும் கல்வி - தொழில்துறை இணைப்பை வலுப்படுத்தியதற்காக சிறந்த செயல்திறன் மிக்க பொறியியல் கல்லுாரி விருதும், எடுஸ்கில்ஸ் அமைப்புடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட்டதற்காக கூட்டாண்மை விருதும், கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாஜலபதிக்கு 'இயக்குநர் சிறப்புத் திறன் விருது - 2026' மற்றும் 'தொலைநோக்குப் பார்வையுடைய கல்வித் தலைவர் விருது' ஆகிய இரண்டு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன.

மேலும், இக்கல்லுாரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர் மதுசூதனன், எடுஸ்கில்ஸ் அமைப்பின் திட்டங்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்படுத்தியதற்காக சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருது பெற்றார்.

இதன் மூலம் கல்லுாரிக்கு 5 தேசிய அளவிலான விருதுகள் கிடைத்துள்ளன.

விருது பெற்றவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் பாராட்டினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us