sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி

/

மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி

மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி

மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி


UPDATED : டிச 06, 2025 09:26 AM

ADDED : டிச 06, 2025 09:32 AM

Google News

UPDATED : டிச 06, 2025 09:26 AM ADDED : டிச 06, 2025 09:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
மணிமேகலை பிரசுரம் சார்பில், மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில், வரும் 7ம் தேதி புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி நடக்க உள்ளது.

தமிழகத்தின் பிரபல பதிப்பகமான, மணிமேகலை பிரசுரம் சார்பில், வரும் 7ம் தேதி, காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, மலேஷிய நாட்டின் தலைநகரமான கோலாலம்பூரில் உள்ள, 'ஒற்றுமைத்துறை மண்டபம், கம்யூனிட்டி சென்டரில், புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி நடக்க உள்ளது.

இதில், பிற்பகல் 3:00 மணிக்கு, மலேசிய இந்திய காங்கிரஸ், தேசிய துணை தலைவரும், தாப்பா எம்.பி.,யுமான டத்தோ சரவணன் தலைமையில், நுால்கள் வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

இதில், செந்துால் முத்தமிழ் படிப்பக தலைவர் ராமன், மலேஷிய எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், மலேஷிய தன வைசியர் சங்கத் தலைவர் ராமநாதன், முன்னாள் தலைவர் கிருஷ்ணன், வாஸ்து நிபுணர் கருல் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கண்காட்சியில், தமிழ்வாணனின் மர்ம நாவல்கள், எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் நுால்கள், 'தினமலர் - வாரமலர்' இதழ் ஆசிரியர் அந்துமணியின் நுால்கள் உள்ளிட்டவற்றை, மலேஷிய வாசகர்கள் வாங்கலாம்.

மேலும், எழுத்தாளர், பதிப்பாளர் வெளியீட்டு திட்டத்தின் கீழ், மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை நுாலாக்க, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணனை, இன்று முதல், 8ம் தேதி வரை, 011 11 536485 என்ற மலேஷிய எண்ணிலும், 98415 44187 என்ற 'வாட்ஸாப்' எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us