10ம் வகுப்பு முடித்தோருக்கு ஆக.,29ல் மதிப்பெண் சான்றிதழ்
10ம் வகுப்பு முடித்தோருக்கு ஆக.,29ல் மதிப்பெண் சான்றிதழ்
UPDATED : ஆக 20, 2024 12:00 AM
ADDED : ஆக 20, 2024 10:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆக., 29ம் தேதி வழங்கப்படும்.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 26 முதல் ஏப்ரல், 8 வரை தேர்வுகள் நடந்தன; 9.08 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள், மே 10ல் வெளியாகின; 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக, வரும், 29ம் தேதி காலை, 10:00 மணி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலேயே வழங்கப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.