தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருமண தயார்நிலை சான்றிதழ் படிப்பு; கோவா அரசு கல்லுாரியில் அறிமுகம்

திருமண தயார்நிலை சான்றிதழ் படிப்பு; கோவா அரசு கல்லுாரியில் அறிமுகம்

திருமண தயார்நிலை சான்றிதழ் படிப்பு; கோவா அரசு கல்லுாரியில் அறிமுகம்


UPDATED : நவ 05, 2026 05:06 PM

ADDED : நவ 05, 2026 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 05:06 PM ADDED : நவ 05, 2026 05:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணஜி:
கோவாவில், திருமண முறிவு மற்றும் விவாகரத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், 'திருமண தயார்நிலை' தொடர்பான சான்றிதழ் படிப்பை, அங்குள்ள அரசுக் கல்லூரி அறிமுகம் செய்துள்ளது.

கோவா மாநில சட்டத்துறையின் புள்ளிவிபரங்களின்படி, 2022 - 25ம் ஆண்டு வரை, கோவா உரிமையியல் நீதிமன்றங்களில் திருமண பிரச்னை மற்றும் விவாகரத்து தொடர்பாக, 3,000க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 947 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், 'திருமண தயார்நிலை' சான்றிதழ் படிப்பை, கோவா ஹோம் சயின்ஸ் அரசு கல்லூரி அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் மகேஷ் பை கூறியதாவது:

கல்லூரியின் மனிதவள மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகள் துறையால் 'திருமண தயார்நிலை: ஆரோக்கியமான மற்றும் நீடித்த உறவுகளுக்கான தயாரிப்பு' எனும் சான்றிதழ் பாடத்திட்டம், வரும் டிச., 2 - 17ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். 15 நாட்கள் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமண தயார்நிலை என்பது வெறும் திருமணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மட்டும் குறிப்பதல்ல; அதற்கு புரிதல், அர்ப்பணிப்பு மற்றும் திருமண வாழ்க்கையின் பொறுப்புகளை உணர்ந்து கொள்ளுதல் ஆகியவை அவசியம். ஆரோக்கியமான, நீடித்த உறவை உருவாக்குவதற்கு தேவையான அம்சங்களை அறிந்துகொள்ள இந்த பாடத்திட்டம் உதவும்.

இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்கவும், திருமண வாழ்க்கைக்கு தயாராகவும் விரும்பும் எவரும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us