தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயிரியலில் தேர்ச்சி எளிது; சென்டம் கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

உயிரியலில் தேர்ச்சி எளிது; சென்டம் கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

உயிரியலில் தேர்ச்சி எளிது; சென்டம் கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து


UPDATED : மார் 24, 2026 06:47 PM

ADDED : மார் 24, 2026 06:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2026 06:47 PM ADDED : மார் 24, 2026 06:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயிரியல் தேர்வில் மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாக்கள் இருந்தன. கட்டாய வினாக்களால் சென்டம் எடுப்பது கடினம் என தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

விருதுநகரில் பிளஸ் 2 உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:
கட்டாய வினா கடினம்

ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிது. வாசித்தால் பதிலை கண்டுபிடிக்கும் வகையில் இருந்தது. இரு மதிப்பெண் வினாக்களில் கட்டாயம் பதிலளிக்க வேண்டியவை ஆசிரியர்கள் வழிகாட்டியது போல் இருந்தது. தாவரவியலில் கேட்ட 3 மதிப்பெண் கட்டாய வினா ஒன்று இருந்தது. 5 மதிப்பெண்களும் எளிது. ஒலி மாசு சமூகம் சார்ந்த கேள்விகள் இடம் பெற்றன. சாராசரி மாணவர்கள் பாஸ் ஆகிவிடலாம். கட்டாய வினாக்களால் சென்டம் எடுப்பது கடினம்.
- ஆர்.சஷ்டிகா, ஸ்ரீவித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

ஈசியாக இருந்தது

வினாத்தாள் வாங்கும் போது பதட்டமாக இருந்தது. வாங்கி படித்த போது எளிமையாக இருந்தது. கட்டாய வினா சற்று கடினமாக இருந்தாலும், யோசித்து பதில் எழுதும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் உடனுக்குடன் விடை அளிக்கும் வகையில் இருந்தது. 2, 3 மதிப்பெண் வினாக்களும் பாடப் புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. விலங்கியல் பிரிவில் சிறிது கஷ்டமாக இருந்தது. நூற்றுக்கு 85 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம். நன்கு தயார் செய்து இருந்தால் நூற்றுக்கு நூறு வாங்கும் வகையில் கேள்விகள் சுலபமாக கேட்கப்பட்டிருந்தது.
- பாலசபரி, எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி அருப்புக்கோட்டை.

இன்டீரியர் வினாக்களும் எளிமை

கேள்விகள் கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எளிமையாக இருந்தது. நூற்றுக்கு நூறு மார்க் பெறலாம். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்தும் தற்போது கேள்விகள் வந்திருந்தது. சிறிய வினாக்கள் முதல் முக்கிய வினாக்களும், இன்டீரியர் வினாக்களும் எளிமையாக இருந்தது. பயமின்றி, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினோம்.
- வர்ஷினி, வள்ளுவர் வித்யாலயா, ஸ்ரீவில்லிபுத்துார்.

அனைவரும் தேர்ச்சி பெறலாம்


அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் வினா பதிலளிக்க எளிதாக இருந்தாலும் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. புத்தகத்தை முழுமையாக படித்தவர்கள் 100 மதிப்பெண் எளிதில் எடுத்துவிடலாம். நன்றாக படித்தவர்கள் 90 முதல் 95 மதிப்பெண்ணும், மற்றவர்கள் 65 முதல் 70 மதிப்பெண்ணும் எடுத்துவிடலாம்.
- செல்வின் தங்கதுரை, உயிரியல் ஆசிரியர், சிவகாசி அம்மன் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us