நியூ பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்
நியூ பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்
UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 11:24 AM
சென்னை:
சென்னையை அடுத்த உள்ளகரத்தில், நியூ பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், அறிவியல் கண்காட்சி துவங்கியது.
உள்ளகரத்தில் நியூ பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், நியூ பிரின்ஸ் பள்ளிகளுக்கு இடையிலான, அறிவியல், கலை, கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
தற்போது வானில் நிகழும், அதிசய நிகழ்வான கோள்கள், ஒரே நேர்கோட்டில் சந்திப்பதை, மாணவர்கள் மிக தத்ரூபமாக செய்து காட்டினர். இதுபோன்று, நீங்கள் சொல்வது, செய்வது எல்லாம், ஒரே நேர்கோட்டில் அமைந்தால், இந்த உலகம் உங்களை பாராட்டும்.
வளர்ந்த நாடுகள் நிலவை ஆய்வு செய்தபோது, நிலவு ஒரு பாலைவனம் என்று மட்டும் கூறினர். ஆனால், இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தின் வாயிலாக ஆய்வு செய்து, அங்கு நீர் இருப்பதை உலகத்துக்கு அறிவித்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி சார்பில், 61,000 ரூபாய் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை, பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன், துணைத் தலைவர் நவீன் பிரசாத், செயலர், வி.எஸ்.மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.