தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் வெளியீடு


UPDATED : ஆக 10, 2026 02:04 PM

ADDED : ஆக 10, 2026 02:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 02:04 PM ADDED : ஆக 10, 2026 02:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் கடந்த மாதம், 15ம் தேதி வெளியாகின.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம், 27ம் தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள, 16,199 இடங்களுக்கு, 72,627 பேர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.

இன்று மாலை, 03:00 மணிக்கு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் வெளியாகிறது. அத்துடன், கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட உள்ளன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us